இவர் இப்போது இயக்கி வரும் படம் ‘புலி’. இந்தப் படத்தை தெலுங்கில் இயக்குகிறார் எஸ்.ஜெ. சூர்யா. இதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நிகிதா படேல் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை, காதல் கலந்த ஆக்க்ஷன் கதை. படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசமான கான்செட் பண்றவராச்சே அவர்... விடுவாரா என்ன... இந்த தெலுங்குப் படத்தின் இடையே ஒரு தமிழ் பாடலை வைத்துள்ளார்.
இந்தப் படலுக்கு யார் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்தவரின் சாய்ஸ்... சிம்பு. உடனே சிம்புவிடம் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறார். சிம்புவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. தெலுங்குப் படத்தின் தமிழ் பாடலுக்கு சிம்பு ஆட்டம் போடுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள எஸ்.ஜெ. சூர்யா வெயிட்டிங்.
No comments:
Post a Comment