Monday, December 7, 2009

பரத் கேட்கும் சம்பளம்

திடீர் பிரேக் விட்டுவிட்டார்கள் திருத்தணிக்கு. பேரரசு இயக்கி அவரே இசையமைத்திருக்கும் இப்படம் காரம் ஸ்வீட் கலந்த கரம் மசாலாவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பேரரசு அடுத்த ஷெட்யூல் போவதற்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாராம். (ஒங்களுக்கேவா?)

இடையில் கதை கேட்பது, சம்பளம் பேசுவது என்று தனி டிராக் ஓட்டிக் கொண்டிருக்கிறார் பரத். ஆனால், என்ன காரணத்தாலோ மோசர்பேர் தயாரிக்கும் படத்திலிருந்து பரத் நீக்கப்பட்டுள்ளதாக கும்மியடிக்கிறது கோடம்பாக்கம். கண்டேன் காதலை படத்திற்கு பிறகு ஹைட் அண்டு சீக் என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்த இந்நிறுவனம் இதற்காக புது இயக்குனர் ஒருவரையும் நியமித்து டிஸ்கஷனில் அமர வைத்திருந்தது. ஆனால், தனது சம்பளத்தை திடீரென்று ஏற்றிவிட்டாராம் பரத். இதனால் தனது யோசனையில் சற்றே பின் வாங்கியிருக்கிறதாம் மோசர்பேர்.

அப்படியே இன்னொரு தயாரிப்பாளருக்கும் எனிமா கொடுத்திருக்கிறார் பரத். ஜெயம்கொண்டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து பின் கண்டேன் காதலையில் தன்னை நிரூபித்திருக்கும் கண்ணன் இயக்கத்தில் மற்றொரு படத்தை தயாரிக்கப் போகிறார் சத்யஜோதி தியாகராஜன். இந்த படத்தில் பரத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணன் விரும்ப, சம்பளப் பேச்சு வார்த்தை நடக்கிறது. விடுவதும், பெறுவதும் பரத் கையில் என்கிறார்கள்.

பார்த்து சாரு...

No comments: