நடிகை சுவாதி, கம்யூட்டர் நிறுவன அதிபரை ரகசியமாக மணந்தார். கடந்த நவம்பர் 22ம் தேதி நடந்துள்ளது அவர்கள் திருமணம் . நேற்றுதான் தகவல் தெரிந்தது.
விஜய் ஜோடியாக 'தேவா' படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து விஜய்யுடன் 'வசந்த வாசல்', 'செல்வா' படங்களிலும், அஜீத் ஜோடியாக 'வான்மதி' படத்திலும் நடித்தார். சமீபத்தில் வெளியான 'யோகி' படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களில் சுவாதி நடித்துள்ளார்.
வர்ஜீனியாவில் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குனராக இருக்கும் கிரண் என்பவரை ரகசிய திருமணம் செய்துள்ளார் சுவாதி.
இவர்களின் திருமணம், கடந்த நவம்பர் 22ம் தேதி, ஹைதராபாத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியிலுள்ள மாருதி கார்டனில் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இருவரும் நேற்று தம்பதி சமேதராக திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்டனர்.
அப்போது திருமணம் குறித்து சுவாதி கூறுகையில், "இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், திரையுலகை சேர்ந்தவர்களை திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை.
யோகி என்னுடைய கடைசி படம். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கணவர் கிரணுடன் இம்மாத இறுதியில் வர்ஜீனியாவில் குடியேற உள்ளேன்' என்றார்.
No comments:
Post a Comment