Monday, December 7, 2009

MailPrint தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் பத்து லட்சம் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் படப்பிடிப்பை டி.ஆர். வரதராஜன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ய, ராம்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ரெடி என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். ரெடி தெலுங்குப்படத்திலும் ஜெனிலியாதான் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
175 நாட்கள் ஓடிய யாரடி நீ மோகினி வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிக்கும் குட்டி படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் உடன் இணைகிறார் மித்ரன் கே.ஜவஹர். இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவராகிறார் இவர்.
தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட் பேனரில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்கள்.
சந்திரமுகி, கில்லி, சிவாஜி போன்ற படங்களைப்போல் பல கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமானமுறையில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

No comments: