'விஜய் அரசியலில் இறங்கக் கூடாது என்பது ஒரு நண்பனாக என்னுடயை வேண்டுகோள். அவரை அரசியல் நிம்மதியாக இருக்க விடாது.
அதற்காக அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவருக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும்!' என்று கூறியுள்ளார் அஜீத்.
மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பளிச்சென்று பேசிவிடுவதில் ரஜினியின் நேர் சிஷ்யர் அஜீத். ஏன் இப்படி? என்று கேட்பவர்களிடம், 'பின் விளைவுகள் பற்றியெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இது என் கருத்து அவ்வளவுதான்' என்று பளிச்சென்று பதில் தருவார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அஜீத், இப்படிக் கூறியுள்ளார்:
"அரசியல் எனக்கு வேண்டாம். சரி வராது. விஜய்யின் அரசியல் பிரவேசம் அவர் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொருத்தவரை அவர் அரசியலுக்கு வர வேண்டாம்.
அப்படி வருவதால் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் எந்த அளவு சந்தோஷமிருக்கும் என்று தெரியவில்லை.
அவருடன் நிறைய பேசி பழகியிருக்கிறேன். அவரது நலம் விரும்பாகவே இதை நான் சொல்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடும் முடிவு அவரது சொந்த விருப்பமே.
என்னைப் பொருத்தவரை இனி படங்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். எனக்கும் 40 வயது ஆகப் போகிறது. இந்த வயதில் வாழ்க்கையும் தரமாக இருக்க வேண்டும், படங்களும் தரமாகத் தர வேண்டும்" என்றார்.
நூத்துல ஒரு வார்த்தை!
No comments:
Post a Comment