வேட்டைக்காரனால் வருகிற டென்ஷனிலிருந்து மீள்வதற்குள் விஜய்க்கு தாவு தீர்ந்து போகிறதாம்.
இதை விட பேசாமல் காங்கிரஸில் சேர்ந்து அதன் பாரம்பரிய அடையாளமான கோஷ்டிப் பூசலையே சமாளித்திருக்கலாம் போலிருக்கு என்று புலம்பும் அளவுக்கு.
பொதுவாக தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது விஜய் மற்றும் அவரது கைடு-காட்பாதர்- நிஜபாதர் எஸ்ஏசியின் பாணி.
முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் ரசிகனிலிருந்தே இப்படி இருந்தே பழக்கப்பட்ட விஜய்க்கு வேட்டைக்காரன் ஒரு ஷாக் அனுபவம்.
படத்தை ஆரம்பித்த போது பிரச்சினை இல்லை என்றும் சன் பிக்சர்ஸுக்கு விற்றதிலிருந்து பெரும் பிரச்சனையாகிவிட்டது விஜய்க்கு.
முதலில் படத்தை அவர் சொன்ன தேதிக்கு வெளியிடாமல் படத்தை முடக்கியவர்கள், பின்னர், விஜய்யின் அரசியல் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளையும் ரீஷூட் செய்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும் என முரண்டுபிடிக்க வேறு வழியில்லாமல் அதையும் செய்து கொடுத்தார் விஜய்.
தீபாவளி, பொங்கல் என ஏதாவது ஒரு விசேஷ நாளில் படத்தை வெளியிட ஆசைப்பட்டார் விஜய். ஆனால் எதிலும் இல்லாமல் டிசம்பர் 18ம் தேதி என அவர்களே நாள் குறித்துவிட்டார்கள். அதற்கடுத்த வாரம் ரிலீஸ் பண்ணியிருந்தால் கூட அது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாகியிருக்கும்.
இப்போது உச்சகட்டமாக, படத்தை ரிலீசுக்கு முன் ஒரு சிறப்புக்காட்சி பார்க்கலாம், பிரிண்டை கொண்டுவாங்க என, பழைய நினைப்பில் விஜய் அண்ட் கோ கேட்க, 'அதெல்லாம் முடியாது. ரிலீசன்னைக்கே பாருங்க' என்று முகத்திலடித்தமாதிரி சொல்லிவிட்டதாம் சன் தரப்பு.
என்ன கொடுமைப்பா இது? என தந்தையிடம் புலம்புகிறாராம் விஜய்!.
No comments:
Post a Comment