மும்பையில் செட்டிலான பிறகு தென்னிந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை அசின். தமிழில், தெலுங்கில் கால்ஷீட் கேட்டதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.
ஆனால் இதெல்லாம் லண்டன் ட்ரீம்ஸ் வெளியாவதற்கு முன்பு. படம் பப்படம் ஆனதால் புதிய படம் எதிலும் அசினை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்கள். விளைவு?
கலைமாமணி விருது வாங்க சென்னை வந்தவர் அப்படியே சில முக்கிய புள்ளிகளிடம் தமிழில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். விஜய்யின் 51 வது படத்தில் அவர்தான் ஹீரோயின் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
அசினின் நிலை தனக்கு வரக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் த்ரிஷா. இந்தியில் நடிப்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என அவசர அவசரமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
தமிழில் ஆடுகளம், தெலுங்கில் பிருந்தாவனம் படங்களை மறுத்தவர் திடீரென்று தெலுங்கில் கோபி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் ரவி தேஜா. கிருஷ்ணா படத்தின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷா, ரவி தேஜா ஜோடி சேரும் படமிது.
பறப்பதை நம்பி இருப்பதை இழக்கக் கூடாதில்லையா... விரைவில் த்ரிஷாவின் தமிழ்ப்பட அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment