கவர்ச்சி காட்சியில் தனக்கு பதிலாக தனது சாயல் உள்ள ஒருவரை நடிக்க வைத்து ஏமாற்றிவிட்டதாக ஜெய் ஆகாஷ் மீது புகார் கூறியிருந்தார் சுனைனா. இது டூப்பா, அல்லது சுனைனாதானா? என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதுவரை கொடுக்காமல் வைத்திருந்த மிச்ச படங்களையும் கொடுத்து பிரச்சனையை பெட்ரோல் ஊற்றி எரிய விட்டார் ஜெய் ஆகாஷ். அதற்கு பிறகும் இவர் மீது சுனைனாவின் எரிச்சல் ஓவராக விழ, என்னை அவமானப்படுத்திய அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் ஜெய். அவ்வளவுதான். அத்தனையும் பொய் என்று குரல் கொடுத்த சுனைனா கப்சிப். அந்த படத்தில் இருப்பது நான்தான். சின்ன பொண்ணா இருக்கும் போது தெரியாம நடிச்சிட்டேன். இப்போ அதை வெளியிடணுமா? என்று இறங்கி பேச ஆரம்பித்திருக்கிறார்.
இதே மாதிரி இறங்கி வந்திருக்கிற இன்னொரு நடிகை சினேகா. திருச்சியில் நகைக்கடை திறக்கப் போன இடத்தில் தனது இடுப்பை கிள்ளியதாக ஒரு நபரை அடையாளம் காட்ட, அவரை நைய புடைத்துவிட்டார்கள் செக்யூரிடிகள். பிரச்சனை போலீஸ் வரைக்கும் போனது. பின்னர் அடிபட்டவரின் மனைவி சினேகா மீது வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்க, சினேகாவும் தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார். என்னவென்று?
இவர்தான் இடுப்பை கிள்ளினார் என்று நான் யாரையும் அடையாளம் காட்டவில்லை. அவர்களே யாரையோ பிடித்து அடித்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் அடித்ததெல்லாம் மறுநாள் செய்திதாள் படித்துதான் எனக்கே தெரியும் என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment