Sunday, October 4, 2009

நயன்தாரா.... -புலிவால் பிடித்த சேச்சி?

எம்எம்டிஏ காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை. ஒரு குடும்ப தலைவி தனது குழந்தைகளுடன், முதல் மாடியிலேயே கொட்ட கொட்ட விழித்திருக்க, அவரது வீட்டுக்கு கிட்டதட்ட நீந்தியே வந்தார்கள் சிலர்.
 
எங்கோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா தங்களுக்கு உத்தரவிட்டதாக கூறி அவர்கள் கொடுத்த அன்பளிப்பில் ஒரு மாதம் வாழ்வதற்கான அத்தனை பொருட்களும் இருந்தன. சம்பந்தப்பட்ட பெண்மணி நயன்தாராவுடைய ஒப்பனையாளரின் மனைவி. எங்கோ இருக்கிற ஒரு குடும்பத் தலைவிக்காக உலகின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தபடி கவலைப்பட்ட நயன்தாரா, இன்னொரு குடும்ப தலைவியை கண்கலங்க விட்டிருக்கிறாரே, என்னவொரு கசப்பான முரண்பாடு?

உதிர்ந்த ரோமம், வானளாவிய அதிகாரம் போன்ற சொற்களுக்கு இணையாக இன்று மக்களால் அதிகம் விவாதிக்கப்படுகிற வார்த்தையாகி இருக்கிறது 'அருகதை இல்லை'

ரமலத்தை பார்த்து நயன்தாரா சொன்ன வார்த்தைதான் இது. பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று செய்திகள் வந்தபோதெல்லாம் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரமலத், இரண்டாவது முறையாக வாய் திறந்தபோதுதான் நிலவரம் கலவரமாகிப் போனது. அந்த பேட்டியில் "இனிமேல் என் கணவருடன் நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்" என்று கூறியிருந்தார் ரமலத். அதுமட்டுமல்ல, "எதற்காக இங்கு வந்தாரோ, அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நயன்தாரா சொன்ன வார்த்தைதான் "எனக்கு அட்வைஸ் பண்ண ரமலத்துக்கு அருகதை இல்லை" என்பது!

அதன்பின் இருவரும் மாற்றி மாற்றி மீடியாக்களில் குமுறிக் கொண்டார்கள். இறுதியாக நடக்கப்போவது என்ன? கோடம்பாக்கத்தில் மிக முக்கியமான சிலரை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். கிடைத்தவை எல்லாமே அதிர்ச்சி ரகம். இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ, அல்லது இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதோ, நயன்தாராவிடமிருந்து ஒரு அறிக்கை வந்திருக்கக் கூடும். என்னவென்று? "எனக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதலை, நானே முன் வந்து தியாகம் செய்கிறேன்" என்று. "ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப் போகிறாராம் நயன்.

"ஆறு மணிக்கு மேலே நான் என்ன செய்யுறேன்னு வேவு பார்க்கிற உரிமை எவனுக்கும் இல்லே" என்று இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த சிலரிடம் நெருப்பை உமிழ்ந்த நயன்தாரா, இப்படி ஒரு திடீர் முடிவெடுத்ததற்கு காரணம்? மிக முக்கியமானவர்கள் அவருக்கு செய்த அட்வைஸ்தானாம். யார் சொல்லியும் கேட்காத நயன், இந்த விவகாரத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன் விளைவுதான் இப்படி ஒரு அறிக்கையை தர முன் வந்ததும்!

அடிப்படையில் நயன்தாரா எப்படி? அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலேயே பேச ஆரம்பித்தோம். வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி. கலகலப்பானவர். அவரது ஆசை நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சரியாக சொல்லப் போனால் குடும்ப வாழ்வுக்காக ஏங்குகிறார் நயன்தாரா. சிம்புவுடனான இவரது காதல் நிஜம். அதன் பின் விஷாலுடன் ஏற்பட்ட தீவிர காதலும், முளையிலேயே கருகிப்போனது. தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த விக்கிரமாதித்தி, வில்லு பட நேரத்தில் விஜயையும் காதலித்தார் என்பதுதான் ஷாக்கான செய்தி. ஆனால், அவரோ இந்த விஷயத்தில் கடுமையான மவுன விரதம் இருக்க, தாங்க முடியாத ஈகோவால்தான் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினாராம். விஜயை வெறுப்பேற்ற என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதுதான் இப்போது புலிவால் பிடித்த சேச்சியாக்கிவிட்டது நயன்தாராவை என்று சொன்ன அவர்கள், தொடர்ந்து சொல்லும் தகவல்கள்தான் படுபயங்கர ஷாக். "இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கூட அவர் தெலுங்கு ஹீரோக்களான ரவிதேஜா, ஜுனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுடன் ஊர் சுற்றுவதையும் நள்ளிரவு பார்ட்டிகளையும் நிறுத்தவில்லை" என்கிறார்கள்.

காதல் வேறு, கல்யாணம் வேறு, கலகலப்பு வேறு என்பதுதான் அவரது பாலிஸி. இப்படிப்பட்ட ஒருவர், வெறித்தனமாக காதலிப்பதும், அதே வேகத்தில் அந்த காதலை இழக்க துணிவதும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தை வெகு சீக்கிரம் பிரபுதேவாவே புரிந்து கொள்வார் என்றார்கள்.

தனது காதல் சுலபத்தில் நிறைவேறும் என்ற நயன்தாராவின் எண்ணத்தையும் சமீப நாட்களில் பொசுக்கி விட்டார் ரமலத். தனது ஒவ்வொரு பேட்டியிலும் மாதர் சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்று அவர் சொன்னது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அவரது அறிக்கைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பல்வேறு மாதர் சங்க பிரதிநிதிகள் ரமலத்தை சந்தித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே நயன்தாராவுக்கு எதிரான தங்கள் வியூகங்களை தெளிவுபடுத்தினார்களாம் ரமலத்திடம். இதுவும் நயன்தாராவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமையக்கூடும்.

சட்டப்படி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்யாவிட்டாலும், இந்துமத சட்டப்படி மாலை மாற்றிக் கொண்டாலே கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள் என்பதால் ரமலத் சம்மதிக்காமல் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவே முடியாது. அதனாலும் நயன்தாரா விலகி கொள்ளலாம்.

ஆக ரமலத்தின் வாழ்வில் சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல, நயன்தாரா பெயர்ச்சியும் மிக முக்கியமானதே!

No comments: