Friday, October 9, 2009

பிரகாஷ்ரா‌ஜின் பிரமாண்ட பிளான்

மொழியைவிட அபியும் நானும் படம்தான் பிரகாஷ்ரா‌ஜின் மனதுக்கு நெருக்கமான படம். அதனால் கன்னடத்தில் அந்தப் படத்தை அவரே ‌‌ரீமேக் செய்கிறார். அவரே ‌‌ரீமேக் செய்கிறார் என்பதன் பொருள், படத்தை அவர் தயா‌ரிக்கிறார் என்பது மட்டுமல்ல, படத்தை இயக்குவதும் அவர்தான்.

கன்னடம் தாய்மொழி என்பதால் இயக்குனராக தனது கன்னி முயற்சியை கன்னடத்தில் மேற்கொள்கிறாரா என்று கேட்டதற்கு பிரகாஷ்ரா‌ஜிடமிருந்து வந்த பதில், நோ. "அபியும் நானும் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் கன்னடத்தில் ‌‌ரீமேக் செய்கிறேன். இந்தியில் படத்தை ‌ரீமேக் செய்யும் எண்ணமும் இருக்கிறது."

ஆனால், அவரை முந்திக் கொண்டு படத்தின் இந்தி ‌‌ரீமேக் உ‌ரிமையை பிரகாஷ்ரா‌ஜிடமிருந்து வாங்கியிருக்கிறார் போனி கபூர். படத்தை இயக்கப் போவது பிரகாஷ்ரா‌ஜ் அல்ல. இந்தியைச் சேர்ந்த வேறொருவர்.

ராதாமோகனின் அடுத்தப் படமான பயணத்தில் நாகார்ஜுனுடன் பிரகாஷ்ராஜும் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: