பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் தங்கச்சி ஷமிதா ஷெட்டியிடம், இயல்பாக இரு என்று அறிவுரை கூறியுள்ளாராம் பிக் பிரதர் போட்டியில் வென்ற அக்கா ஷில்பா ஷெட்டி. 2007ம் ஆண்டு லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியவர் ஷில்பா. அதன் பிறகு அவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டது. இந்த நிலையில், பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஷில்பாவின் தங்கச்சியும், நடிகையுமான ஷமிதா ஷெட்டி பங்கேற்கிறார்.
அக்காவைப் போல தங்கச்சியும் வெற்றி யைத் தட்டிச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷமிதாவுக்கு, ஷில்பா ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் கொடுத்துள்ளாராம். இதுகுறித்து ஷமிதா கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதாக தெரிய வந்தவுடன் அதுகுறித்து ஷில்பா எந்தக் கருத்தும் சொல்லவில்லை. நீயே முடிவு செய்து கொள் என்று மட்டும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நான் முடிவெடுப்பதிலும் அவர் தலையிடவில்லை. அவர் கொடுத்த ஒரே அட்வைஸ் - நீ நீயாகவே இரு என்பது மட்டுமே என்றார்.
தற்போது மும்பையின் ஆம்பி வேலியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ளது.
2000மாவது ஆண்டில் மொஹாபதீன் என்ற படம் மூலம் நடிக்க வந்தவர் ஷமிதா. ஆனால் ஒரு படமும் அவருக்கு உருப்படியாக தேறவில்லை. கிட்டத்தட்ட ஷில்பாவின் ராசிதான் ஷமிதாவுக்கும்.
இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவரைத் தேடி வந்துள்ளது. பிக் பிரதருக்குப் பிறகுதான் ஷில்பாவுக்கு ஏற்றம் ஏற்பட்டது. அதேபோல பிக் பாஸுக்குப் பிறகு ஷமிதாவின் மார்க்கெட் ரேஞ்சும் மாறலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது.
கலர்ஸ் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதில் பூனம் தில்லான், கிளாடியா சிசெலா, கமால் கான், ஷெர்லின் சோப்ரா, விந்து தாரா சிங் ஆகியோரும் உள்ளனர்.
மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு நிகழ்ச்சியை காம்பியரிங் செய்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் ஷில்பா ஷெட்டி என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment