தசாவதாரம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர் ஷம்மு. ப்ரியதர்ஷனின் காஞ்சீவரம் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து கரணுடன் மலையன் படத்தில் நடித்தார். தற்போது மாத்தியோசி படத்தில் நடித்து வருகிறார்.
வரிசையாக படங்கள் இருந்தாலும் ஷம்முக்கு ஒரு வருத்தம். அவர் முதல் முதலாக நடித்த மயிலு இன்னும் வெளியாகவில்லை. ஜீவன் இயக்கிய இந்தப் படத்தை பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்திருந்தது.
தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்குப் படங்களிலும் வாய்ப்புகள் ஷம்முவை தேடி வருகிறது. முக்கியமாக பொம்மரிலு ஹிட் படத்தை கொடுத்த பாஸ்கரின் அடுத்தப் படத்தில் ஷம்மு நடிக்கிறார். படம் ஹிட்டானால் தமிழ் ரசிகர்கள் ஷம்முவை மறந்துவிட வேண்டியதுதான்.
No comments:
Post a Comment