ஆசின் அடுத்தபடியாக பாலிவுட்
ஆமிர்கான், சல்மான் கான் என போய்க் கொண்டிருக்கும் ஆசினின் அடுத்த ஸ்டாப் அபிஷேக் பச்சன் என்பது உறுதியாகியிருக்கிறது.
கலின் ஹம் ஜீ ஜான் சே என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்காக அபிஷேக்குடன் இணைகிறார் ஆசின். அசுதோஷ் கோவரிகர் இப்படத்தை இயக்குகிறார். சிட்டகாங் புரட்சி குறித்த கதையாம் இது.
இப்படத்தில் மாஸ்டர்தா என அழைக்கப்படும் சுர்ஜ்யா சென் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அபிஷேக். சுர்ஜ்யா சென்தான் சிட்டகாங் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் ஆவார்.
அபிஷேக்கும், ஆசினும், கோவரிகருடன் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்தப் படத்தை பிவிஆர் பிக்சர்ஸுடன் இணைந்து கோவரிகர் தயாரிக்கவுள்ளார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு
ஆசின் இந்தியில் 2வதாக நடித்துள்ள லண்டன்
இந்த நிலையில் அவருடைய 3வது படம் உறுதியாகி விட்டது.
சமீபத்தில்தான் கோவரிகரின் படமான வாட்ஸ் யுவர் ராசி வெளியாகி பெரும் பிளாப் ஆனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை 'சிக்'கென தர தீவிரமாக உள்ளார் கோவரிகர்.
No comments:
Post a Comment