Thursday, October 8, 2009
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி
ஏ.ஆர். ரஹ்மான் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தமது இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். இந்நிகழ்ச்சி ஷக்தி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உளள மார்க் ஸ்வர்ணபூமியில் 11ஆம் தேதி நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண சுமார் முப்பதாயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களை அவரது இசையில் ஹரிகரன், சாதனாசர்கம் உள்பட பல புகழ்பெற்ற பாடகர்கள் பாடுகிறார்கள்.
No comments:
Post a Comment