Sunday, October 4, 2009
தமன்னாவுக்காக மோதும் கார்த்தி
படப்பிடிப்பை முடிக்கும் தருவாயை நெருங்கியுள்ளது கார்த்தி தமன்னா நடிக்கும் ‘பையா’ படம். இந்தப் படத்தில் கார்த்திக் பதினெட்டு வில்லன்களுடன் மோதுகிறார். லிங்குசாமி தமது சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தயாரித்து இந்தப் படத்தை இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளார் லிங்குசாமி. தமன்னாவை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களிடம் மோதும் கார்த்தி சுமார் பதினெட்டு வில்லன்களுடன் மோதுகிறாம். மும்பையைக் கலக்கும் தாதா கேரக்டரில் சோமன் நடிக்கிறார். தமன்னாவைக் காப்பாற்ற இத்தனை பேருடன் மோதுகிறீர்களே... கவனமா மோதுங்க... என்று படப்பிடிப்பில் உள்ளவர்களே அவரை கலாய்க்கிறார்களாம்....
No comments:
Post a Comment