‘காதல்’ படத்தில் அறிமுகம் ஆன சந்தியா அதன்பிறகு நடித்த படங்களில் பல பிளாப் ஆகின. ஆனாலும் அம்மணி கீழே விழாமல் நின்று கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்னவோ ஏதோ என்று ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இப்போது சந்தியா எக்கச்சக்க பிஸியாக இருக்கிறார். கையில் வரிசையாக தமிழ் படங்கள். இது போதாது என்று தெலுங்கில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தலை கால் புரியாத சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கும் சந்தியா, இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவின் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பாராம். அந்த இடத்தை நோக்கி தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறாராம்.
அதுவரைக்கும் தாக்குப்பிடிப்பீங்களா...?
No comments:
Post a Comment