கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் தமன்னா... - இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி
18 வயதாகும் தமன்னா, மேஜராவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
இப்போது பெரிய நடிகர்களின் விருப்பமான நாயகியாக மாறிவிட்டார்.
பரத், ஜெயம் ரவி, விஜய் என அவரது ஆட்டம் களைகட்டிவிட்டது. இந்த நிலையில், அவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கவிருக்கும் கமலின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா.
கமல் படமாச்சே... முத்தக் காட்சி இருக்குமா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வந்ததாம். 'அப்படின்னா என் ரேட்டே வேற' என்ற ரீதியில் பேசிய தமன்னா, ரூ.1.25 கோடியை சம்பளமாகக் கேட்க, 'இவ்வளவு காஸ்ட்லி லிப்ஸ் தேவையா' என யோசித்து வருகிறாராம் ரவிக்குமார்.
No comments:
Post a Comment