அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில், முதல்வர் கலைஞருக்கு உலக கலை படைப்பாளி விருது வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்களும், நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டார்கள். முதல்வரை பாராட்டி கமல்ஹாசன் பேசியதாவது-
கலைஞரின் வசனம் பேசி காட்டிதான் நடிகன் ஆனேன். நடிகர் திலகம் மடியில் இடம் பிடித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் பாராட்டி இருக்கிறார். பத்மஸ்ரீ என்றார். ஏற்றுக் கொண்டேன். கலைஞானி என்றார். ஏற்றுக் கொண்டேன். அவர்தான் என் நடிப்புக்கு மார்க் போடும் வாத்தியார் என்றார்.

இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது-
திரைப்பட தொழிலாளர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டி தருவதற்காக பணம் ஒதுக்க சொல்லிவிட்டுதான் இங்கே வந்திருக்கிறேன். தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டுமென்று இங்கே கேட்டார்கள். சின்ன திரையுலகினரையும் சேர்த்து திரைப்பட நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும். இங்கு பேசிய வி.சி.குகநாதன் விருது ஒரு கேடா என்று யார் யாரோ கேட்பதாக குறைபட்டுக் கொண்டார். எனக்கு எப்போதும் இதுபோன்ற விமர்சனங்களை விமர்சிப்பது பிடிக்காது. பெரியார், காமராஜர், அண்ணா படாதபாடா? நாம் பட வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்று எண்ணிக் கொள்வேன். வருத்தப்பட மாட்டேன். அப்படியே வருத்தப்பட்டால் அந்த வருத்தம் போக்கும் மருந்துதான் நீங்கள் தரும் மகிழ்ச்சி. என் பயணத்தை களைப்பின்றி நடத்த துணை நிற்கும் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
No comments:
Post a Comment