Sunday, October 11, 2009

சிம்பு வீட்டு முன் கார் நிறுத்தியதால் தகராறு!

சிம்பு வீட்டு முன் வெளியூர்க்காரர் ஒருவர் காரை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டு போலீஸ் [^] பிரச்சினையாகி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் இந்தி பிரசார சபா சாலையில் நடிகர் [^] சிம்புவின் வீடு உள்ளது. இந்த வீட்டை ஒட்டியுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிம்புவின் வீட்டு முன்பு ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் சிம்பு வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் இடையே பெரும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அந்த மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு வந்த ஒருவர் தனது காரை சிம்பு வீட்டு முன்பு நிறுத்தினார். இதற்கு சிம்புவின் வீட்டு வாட்ச்மேன் எதிர்ப்பு [^] தெரிவித்தார்.

இதனால் அந்த நபருக்கும், வாட்ச்மேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் வாட்ச்மேன் முரளிக்கு ஆதரவாக சிம்பு வீட்டில் இருந்து பலர் திரண்டு விட்டனராம். கிட்டத்தட்ட அடிப்பது போல பாய்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து காரை நிறுத்திய நபருக்கு ஆதரவாக திருமணத்துக்கு வந்தவர்களும் கூட்டமாக சிம்பு வீட்டு முன் திரண்டு பெரும் ரகளையில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சிம்பு வீட்டிலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தி.நகர் ஆய்வாளர் சரவணன் அங்கு விரைந்து வந்து வாட்ச்மேன் முரளியிடம் விசாரணை [^] நடத்தினார்.

பின்னர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

No comments: