Monday, October 12, 2009

பிரவிண் காந்த் இயக்கும் படம்

‘ரட்சகன்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆன பிரவின்காந்த் அந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் குஞ்சுமோனை மண்ணைக் கவ்வ வைத்தார்.
அதற்குப் பிறகு ‘ஜோடி’ படத்தை எடுத்தார் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ‘ம்... இனி என்ன... நடிப்பு தான்’ என்று நடிப்பில் இறங்கியவர் சர்ரென வழுக்கினார். தற்போது விளம்பரப் படங்களை எடுத்து வருகிறார் பிரவிண்காந்த். இவர் லலிதா ஜூவல்லரிக்காக எடுத்த விளம்பரப் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த லலிதா ஜூவல்லரி நிறுவனம் பிரவிண் காந்த் திறமையைப் பார்த்து அசந்து போய்விட்டதாம். உடனே கூப்பிட்டு ‘படம் தயாரிக்கிறோம் என்றும் அதை நீங்கள் தான் இயக்குகிறீர்கள்’ என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளது லலிதா ஜூவல்லரி. ஹீரோ ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

No comments: