Monday, October 12, 2009

விக்ரம் தயாரிப்பில் நகரம்

‘ராவணன்’ அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படம் என நடிப்பில் பிஸியாகிவிட்ட விக்ரம், தயாரிக்கும் படம் நகரம்.
இந்தப் படத்தை இயக்குபவர் ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமார். இந்தப் படத்தின் கதை நகரம் சம்பந்தப்பட்டது என்பதால் நகரம் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். அவர்களுடன் ஹீரோயினாக நாடோடிகள் அபினயாவும் நடிக்கிறார்.
 
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்களே நடிப்பார்கள் என்று தெரிகிறது. படத்திற்கு இசை சசிகுமாரின் குருநாதர் ஜேம்ஸ்வசந்தனேதான்.

No comments: