தீபாவளிக்கு வேட்டைக்காரன் வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் கலந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் சா பூ திரி, அதே நேரம் அதே இடம் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. சரி, அப்படியானால் எப்போதுதான் படம் வெளியாகும்? தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறை இந்த தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய விதியின்படி பொங்கலுக்குதான் வேட்டைக்காரனை வெளியிட வேண்டும். அவ்வளவு நாள் படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் காத்துக் கொண்டிருக்குமா? அதற்கு முன்னால் அவர்கள் படத்தை வெளியிட துணிந்தால் என்ன செய்வது? இதுதான் இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டிப் படைக்கும் கேள்வி.
பொங்கலுக்கு முன்னால் வேட்டைக்காரன் வெளியானால் என்ன சமாதானம் சொல்லலாம் என கூட்டாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment