Monday, October 12, 2009

வில்லி ஆகிறார் மோனிகா

ஏய்... அவ்ளோ...தான் நீ...’ சொர்ணம்க்கா ஸ்டைலில் அதிர குரல் கொடுக்கிறார் மோனிகா. எல்லாம் ஒரு ஹோம் ஒர்க் தானாம். என்னதான் அந்த ஹோம் ஒர்க் என்று விசாரித்துப் பார்த்தால்... மோனிகாவுக்கு அமைதியான கேரக்டரில் நடித்து நடித்து போரடித்து விட்டதாம். ஒரு ஹாட்டான வெயிட்டான வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதுதான் மோனிகாவின் இப்போதைய ஆசையாம். இந்த மாதிரி கேரக்டர் உள்ள படமாக இருந்தால் உடனே கால்ஷீட் தரேன் என்று தமது மேனேஜர் மூலம் தூது விட்டுக் கொண்டிருக்கிறார் மோனிகா. இவருக்கு வில்லி ரோல் மாடல் ‘திமிர்’ படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி தானாம். ம்... தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு வில்லி ரெடி....

No comments: