ரஜினிகாந்தும் கமல்ஹாஸனும் சினிமாவின் இரு கண்கள் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி , கலையுலக படைப்பாளி விருதினைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:
ரஜினிகாந்தை, கமல்ஹாசனை பற்றியெல்லாம் நான் கூற வேண்டாம். அவர்களைப் பற்றி நான் சொல்வது- என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொள்வதைப்போல!. அப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி நீ வேறுபடுத்தி புகழ்கிறாயா என்று யாரும் எண்ணிக் கொள்ளக் கூடாது.
என்ன இருந்தாலும் அவர்கள் என்னுடைய உணர்வோடு, என்னுடைய உறவாக, தமிழகத்திலே, திரையுலகத்திலே, அந்த நட்பின் சின்னங்களாக அவர்கள் விளங்குகிறார்கள். கமல்ஹாசன் ஆனாலும், ரஜினிகாந்த் ஆனாலும் அவர்கள் எல்லாம் இன்றைக்கும் கலை உலகத்திலே இரு கண்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
மற்றவர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. உடல் என்றால் கண்கள் மாத்திரமல்ல, வேறு பல முக்கிய அவயங்களும் இருக்கின்றன. அந்த அவயங்களை நான் சொன்னதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோரும் ஒருமித்த கருத்தோடு, அந்த உணர்வோடு இங்கே கூடி இந்த விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment