ஓபாவும், பின்லேடனும் ஒண்ணா உட்கார்ந்த பில்டப் கொடுக்கிறாங்க இந்த சம்பவத்திற்கு. ஆனால் இந்த சந்திப்புக்கு ஒரு சாதாரண இஞ்சி மரபா எபெஃக்ட் கூட இல்லாமல் போனதுதான் ஆச்சர்யம்.
வேறொன்றுமில்லை. ஃபெப்சி தொழிலாளர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார் நயன்தாரா. இவரது போதாத நேரமோ என்னவோ, லேட்டாக வந்த நயனுக்கு சிம்புவின் பக்கத்தில் உட்காரதான் இடம் கிடைத்தது.
இதுக்கு முன்னாடி ஒருமுறை திரையுலகினர் உண்ணாவிரதம் நடத்தின போதும் சிம்புவுக்கு இங்குதான் இடம் கிடைத்தது. அபபோது கொஞ்சம் முன்னேறி அவரது மனசில இடம் பிடிக்க ட்ரை பண்ணிய சிம்புவுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான். இந்த முறை அப்படியெல்லாம் அவர் ட்ரை பண்ணவே இல்லை. வெந்த புண்ணுல வெங்காயத்தை பிழிவானேன் என்று அமைதியாக இருந்துவிட்டார். பதிலுக்கு நயன்தாராவும் அமைதியாக இருந்துவிட்டாராம். ஆனால், நயன்தாராவின் வரவில் அதிர்ந்து போனது பிரபுதேவாதான்.
தனது குடும்பத்தினருடன் இந்த விழாவுக்கு வந்திருந்த பிரபுதேவா, நயன்தாராவை பார்த்ததும் விருட்டென்று எழுந்து வெளியேறிவிட்டார். ஒருவேளை இருவரும் அருகருகில் இருப்பது மாதிரி யாராவது படம் எடுத்துவிட்டால், அதற்கு பின்பு எழுகிற சர்ச்சையை சமாளிப்பது யாராம்? அதனால்தான் இந்த உஷார்.
No comments:
Post a Comment