Sunday, October 11, 2009
சூர்யா ஏன் அப்படி பேசினார்?
நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடிகர் நடிகைகளின் ஆபாசப் பேச்சுக்கு முதல் சுழி போட்டவர் நடிகர் சூர்யாதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பத்திரிகையாளர்களின் இப்போதைய கோப லிஸ்டில் விவேக்குக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளவர் சூர்யாதான்.
பத்திரிகையாளர்கள் அனைவரையுமே பொத்தாம் பொதுவாக ஈனப்பயல்கள் என்றும், இவர்களை நசுக்க வேண்டும் என்றும் இவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியது:
சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது. இப்போதே நசுக்கிவிட வேண்டும்.
பொழப்புக்காக அசிங்கத்தை எழுதும் ஈனப்பயல்கள் இவர்கள். நடிகர் சங்கம் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக்கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். அப்புறம் முக்கியமானது... சீட்டுக்கடியில் போட்டோ எடுக்காதீங்க, என்றார் கடுப்புடன்.
எல்லாம் சரிதான்... உள்ளாடை வெளியில் தெரிய குட்டைப் பாவாடை போட்டுக்கொண்டு கேமராவுக்கு போஸ் தரும் த்ரிஷாக்கள், ப்ரியா மணிகள், நயன்தாராக்களிடம் இந்த அறிவுரையை முழங்கியிருக்கலாமே சூர்யா!
No comments:
Post a Comment