Wednesday, October 14, 2009

விவேக்கின் ‘பத்மஸ்ரீ’ - திரும்ப பெற வலியுறுத்தல்!

திரையுலகில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் காரணமாக அவசர பொதுக்குழுவை கூட்டியது சினிமா பிரஸ் கிளப்.
இரா.த.சக்திவேல், ஆப்ரஹாம், இராமானுஜம் மற்றும் இராவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பத்திரிகையாளர்களை ஒட்டுமொத்தமாக திட்டி தீர்த்த நடிகர் நடிகைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக நடிகர் விவேக் தொடர்பான ஒரு தீர்மானத்தை பத்திரிகையாளர்கள் அனைவரும் பேரார்வத்துடன் வரவேற்றனர்.

விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது தொடர்பான தீர்மானம்தான் அது. ‘நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் திரு.விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும் அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி அந்த விருதை திரும்ப பெற வேண்டுகோள் வைக்க வேண்டும்’

இதுதான் சினிமா பிரஸ்கிளப்பின் அந்த முக்கிய தீர்மானம். இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்கு பத்திரிகையாளர்களின் பல்வேறு அமைப்புகள் கடிதம் அனுப்பவும் முடிவு செய்துள்ளன.

No comments: