Monday, October 12, 2009
சிக்ஸ் பேக் கவிஞர்
பாடலாசிரியர் விஜய்க்கு கதாநாயகநாக நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையை நிறைவேற்றி வைத்தப் படம்தான் ‘ஞாபகங்கள்’. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிகா நடித்திருந்தார். காவியக் காதல் அது இது என்று ஏகப்பட்ட பில்டப்களைக் கொடுத்து இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டார்கள். ஆனால் படம் வந்த வேகத்தில் ஓட்டம் பிடிக்க, செய்வதறியாமல் திகைத்த விஜய் ஒரு வழியாக தன்னைத் தேற்றிக் கொண்டார். சுற்றிலும் இருந்தவர்கள் எல்லாம் இனிமேல் இந்த மாதிரி காவியக் காதலை படம்பிடிக்கிறதை விட்டுட்டு கமர்ஷியலுக்கு மாறுறதுக்கு வழியப் பாருங்க... என்று செல்லமாய் கோபித்துக் கொள்ள இயக்குநர்களைத் தேடிப் பிடித்து கதை சொல்லுமாறு தொல்லை கொடுத்து வருகிறாம் விஜய். இந்நிலையில் ஆக்க்ஷன் படம் பண்ணுவது என்று முடிவாகி விட, இப்போது ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக்... முயற்சியில் இருக்கிறாராம் இந்த வித்தக கவிஞர்.
No comments:
Post a Comment