Friday, September 18, 2009

என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க! - மன்றாடும் சிம்ரன்

Simran

புதிய நாயகிகளுக்கே வாய்ப்பு கிடைப்பது படு திண்டாட்டமாகிவரும் இன்றைய நிலைமையில், இரண்டு மூன்று ரவுண்டடித்து கல்யாணமாகி அந்த வாழ்க்கை போரடித்துவிட்டதால் மீண்டும் நடிக்க வந்த நடிகைகள் நாளுக்கு நாள் களத்தில் அதிகரித்தபடி உள்ளனர்.

திரும்ப நடிக்கவே வரமாட்டேன்.. அதுவும் கோடம்பாக்கமே வேண்டாம் என்று இறுமாப்புடன் போய், ஒரு குழந்தை [^] பிறந்ததும் திரும்ப நடிக்க வந்தவர் சிம்ரன். அவரும் மீண்டும் கதாநாயகியாக என்னென்னவோ சொய்து பார்த்துவிட்டார். ஒன்றும் நடக்கிற வழியைக் காணோம். நிறைய சமையல் மசாலா விளம்பரங்களில் நடித்ததோடு சரி.

சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த காட்சிகள் சகிக்க முடியாத ரகமாகிவிட, வாய்ப்புக் கொடுக்கலாமா என்ற யோசனையிலிருந்தவர்கள் கூட பின்வாங்கிவிட்டார்கள்.

இப்போது 'தலைக்குமேல போயாச்சு... ரெண்டில் ஒண்ணு பார்த்துடலாம்?' என நினைத்துவிட்டாரோ என்னமோ... இப்போது நீச்சல் உடையிலும் நடிக்கத் தயாராகிவிட்டாராம் அம்மணி.

நீச்சல் உடை, முத்தக் காட்சி, கிளு கிளு ஐட்டம் நடனம் எதுவாக இருந்தாலும் நான் ரெடி... வாங்கோ என்று சொல்லியனுப்புகிற அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம் சிம்ரன்.

இந்த காஸ்ட்யூமெல்லாம் நல்லாதான் இருக்கும்... ஆனா அதை இப்போ நீங்க போட்டா நல்லாருக்குமா? என்று நக்கலாகக் கேட்கிறார்களாம் சில குறும்புக்கார இயக்குநர்கள்.

No comments: