Friday, September 18, 2009

சீச்சி... தமிழ்நாடு புளிக்கும் -கேரளாவில் ஒதுங்கிய நடிகை

குதிரைக்கு சுடிதார் போட்ட மாதிரி குலுக்கி தளுக்கி வந்த லட்சுமிராய், 'போட்டோவ ரசிக்கிறாய்ங்க, நடிக்கிற படத்துக்கு மட்டும் உள்ளே வராம தலை தெறிச்சு ஓடுறாய்ங்களே'ன்னு தமிழ் ரசிகப்படை மேல செம கோவத்திலே இருந்தார். ஆணானப்பட்ட ஜெயம் ரவியோடு கூட நடிச்சாச்சு. அப்படியும் ஸ்டார் அந்தஸ்து கொடுக்கறதுக்கு ரேஷன் கார்டு, பிளட் குரூப்பெல்லாம் கேக்கிறாய்ங்களேன்னு வருத்தத்திலே இருந்த லட்சுமிராய், இப்போ லேண்ட் ஆகியிருக்கிற இடம் கேரளா.
வந்தாரை வரவேற்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும், வளமான சந்தனக்கட்டைகளுக்கு வரவேற்பு வளைவு வைக்கறதில் என்றைக்கும் முன்னாடி நிற்பது கேரளாவாச்சே? போன வேகத்திலேயே மம்முட்டி படம் இரண்டும், மோகன்லால் படம் ஒன்றும் கிடைச்சிருக்காம். படம்னா ஏதோ பாஸ்போர்ட் சைஸ் படமில்லே. நிஜமாகவே சினிமா படம்.
தன் கண்ணை தன்னாலேயே நம்ம முடியாத அதிர்ச்சியிலே இருக்காரு லட்சுமிராய். வேணும்னா பாருங்க. இங்கே கொடுக்கிற ஹிட்டு சத்தம் தமிழ்நாட்டுல கேட்டுட்டு ஓடி வரணும் எல்லாரும் என்கிறாராம்.
டிரஸ் சின்னதா இருந்தாலும் லட்சியம் பெருசு லட்சுமிராய்க்கு. நினைச்சது நிறைவேறட்டும்...

No comments: