Thursday, September 17, 2009

ஆன்லைன் விபச்சாரம்: போலீஸ் வளையத்தில் நடிகைகள்!

ஆன்லைன் விபச்சாரம் எனப்படும் நூதனமான தொழில் பல நடிகைகள் ஈடுபட்டிருப்பதை சென்னை புறநகர் போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறந்த அப்பு என்ற நபரையும் அவனுக்குத் துணையாக இருந்த பாரதி கண்ணன் என்ற நபர் உள்ளிட்ட பலரையும் கைது செய்துள்ளனர்.

சிபிசிஐடி, விபச்சாரத் தடுப்புப் பிரிவு என பலருக்கும் டிமிக்கி கொடுத்து வந்த கன்னட பிரசாத் கைதாகி ஜெயிலுக்குச் சென்றதும், அவனது கூட்டாளிகள் புதிய ரூட்டில் விபச்சாரத்தைத் தொடர்ந்து செய்துள்ளனர்.

இதில் ஒன்றுதான் ஆன்லைன் விபச்சாரம்.

இதில் விவிஐபிக்கள் வெளியூர்/ வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் போகும்போது அவர்களுக்கு துணையாகச் செல்வது போல பெண்களை அனுப்பி உல்லாசமாக இருக்க வைப்பார்கள். நாளொன்றுக்கு ரூ.30,000 முதல் பல லட்சங்கள் வரை இதற்கு சார்ஜ்.

இதில் போலீஸ் தொல்லையும் இருக்காது. மேலும் வருகிற விஐபியைப் பொறுத்து, போலீஸ் காவலுக்குள்ளேயே பாதுகாப்பாக தொழிலை நடத்தும் வசதி வேறு.

பல ஆண்டுகளாக கமுக்கமாக, ஆனால் படு ஜோராக இந்தத் தொழில் நடந்து வருகிறது.

இந்தத் தொழிலில் பல நடிகைகள் ஈடுபட்டிருந்ததையும், கைது செய்யப்பட்ட அப்பு, பாரதி கண்ணன் போன்றோர் ஆதாரங்களுடன் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் தெரிவித்துள்ளார்களாம்.

பல வருடங்கள் கொடிகட்டிப் பறந்த இரண்டெழுத்து நடிகை ஒருவர், அரசியல் பின்னணி கொண்ட நடிகை ஒருவர், அடிக்கடி வெளிநாடு செல்வதை பொழுதுபோக்காகக் கருதும் நடிகை ஒருவர் என பட்டியலை வாசிக்கிறார்கள் போலீசார்.

இநத நடிகைகளை போலீசாரே விசாரித்ததில் ஆடிப்போய், எல்லா உண்மைகளையும் ஒப்புக் கொண்டு, தங்கள் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம் என கதறி அழுதார்களாம்.

அப்புவை கைது செய்த புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கூறுகையில், "சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கொடுத்த தகவல்கள் மற்றும் அவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து அப்புவை வளைத்தோம்.

'எஸ்கார்ட்ஸ்' என்ற பெயரில் நடிகைகள், மாணவிகள் என பல பெண்களை விபசாரத்தில் வீழ்த்தியதை விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறான் அப்பு. இன்னும் மிச்சமுள்ள அவனுடைய கூட்டாளிகளையும் கைது செய்துவிடுவோம் விரைவில்," என்றார்.

No comments: