‘அசின் மட்டும் தான் இந்திக்குப் போவாரா... நாங்களும் போவம்ல...’ என்று அசினுக்குப் பின்னாலேயே பாலிவுட் வாய்ப்புகளைப் பிடிக்கும் எண்ணத்தில் படையெடுத்துப் போனார் த்ரிஷா.
ஆனால் அசினுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு கூட இவருக்குக் கிடைக்கவில்லை. தமிழிலும் இப்போது இவர் கைவசம் படங்கள் இல்லை. இவர் தமிழில் பிடித்து வைத்திருந்த இடத்தில் இப்போது தமன்னா உட்கார்ந்து கல்லா கட்டுவதால் மீண்டும் தமிழில் தலையெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. ஆனாலும் கொஞ்சம் கூட... கூச்சமே இல்லாமல் எனக்கு நான் இந்தி, தெலுங்குப் படங்களில் பிஸி. அதனால் தமிழில் கேட்டு வருபவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொள்கிறார்.
ஊருக்கே தெரிஞ்ச பிறகும் ஏன் தான் மூடி மறைக்கணுமோ...?
No comments:
Post a Comment