அமீர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள படம் யோகி. இந்தப் படத்தை வாங்கி ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டியது சன். ஆனால் ஒரு நிபந்தனை விதித்திருந்தார் அமீர்.
அமீரின் யோகி என்றுதான் அனைத்து டிசைன்களிலும் வரவேண்டும் என்பதே அது.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது சன் பிக்சர்ஸ். இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த சன் பிக்சர்ஸ் சக்ஸேனா, தனது பேச்சின்போதே, இந்தப் படத்தை சன்பிக்ஸர்ஸ் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தார்.
உடனே, எழுந்த அமீர், 'அதுக்கென்ன, தாராளமா உங்களுக்குத் தர சம்மதம்" என்று கூற, டீல் ஓகேயாகிவிட்டது.
இப்போது சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் அமீரின் யோகி என வெளியாகப்போகிறது இந்தப்படம்.
ஈரம் படத்தை இதே முறையில் கேட்டுப் பார்த்தார் சக்ஸேனா. ஆனால் ஷங்கர் மறுமொழி ஏதும் சொல்லாமல் அமைதி காத்து, தாமே வெளியிட்டுவிட்டார். படம் செம பிக்கப்!
No comments:
Post a Comment