Friday, September 18, 2009

இடத்தை தக்கவெச்சிக்கணும் - பரணி

‘கல்லூரி’யில் அறிமுகம் ஆன பரணிக்கு அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த படமும் கேரக்டரும் அமையவில்லை.
நாடோடிகளில் சசிகுமாரின் நண்பர்களின் ஒருவராக நடித்தாலும் நல்ல அழுத்தமான கேரக்டர். படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து விட்டு ஏராளமானோர் பாராட்டியிருக்கிறார்கள். ‘நாடோடிகள்’ படத்திற்குப் பிறகு அது போன்ற வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
 
இப்போது கதை கேட்டுக் கொண்டிருக்கும் பரணி, ‘நாடோடிகள் எனக்கு ஒரு நல்ல இடத்தைத் தேடித்தந்துள்ளது.... அதை தக்க வெச்சிக்கிறமாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கணும்...’ என்கிறார்.

No comments: