Wednesday, September 16, 2009

ராஜேஷ்குமாரின் ‘அகராதி’

எழுத்தாளர்கள் எல்லாரும் சினிமாவுக்கு வருகிற காலம் இது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரையும் விரட்டிச் சென்று சினிமாவிற்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவர் ‘இரவில் ஒரு வானவில்’ என்ற நாவலை எழுதியிருந்தார். இப்போது அந்த நாவலை படமாக்குகிறார் நாகா வெங்கடேஷ். படத்திற்கு ‘அகராதி’ என்று தலைப்பும் வெச்சு படப்பிடிப்பையும் முடிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டார்கள். இந்தப் படத்தில் ‘பழனியப்பா கல்லூரி’ படத்தில் நடித்த பிரதீப் கதாநாயகநாக நடிக்கிறார். அவருடன் மோனிகா, அர்ச்சனா, கீர்த்திசாவ்லா, சௌந்தர்யா என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

ஒரு கொலையும் அதன் பின்னே நடக்கிற புலனாய்வும் தான் படத்தின் கதையாம். இடையே கொஞ்சம் சென்டிமென்டையும் புகுத்தியிருக்கிறார்களாம். இந்தப் படத்தை வர்ணிகா மூவி மேக்கர்ஸ் மற்றும் கே.எஸ். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

No comments: