Wednesday, September 16, 2009

விஷால்-வெங்கட்பிரபு சந்திப்பு... -அமையுமா வெற்றிக் கூட்டணி?

அஜீத்தின் ஐம்பதாவது படம் யாருக்கு? தொடரும் சஸ்பென்ஸ் லிஸ்ட்டிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. பில்லா படத்தையே வெங்கட் பிரபு இயக்கியிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை காத்திருக்க சொன்னார் தல.

இப்போது காத்திருப்போர் பட்டியலிலும் இல்லையாம் வெங்கட் பிரபு. தற்போது கோவா படத்தில் பிசியாக இருக்கும் வெங்கட்டும் விஷாலும் ஒரு ஓய்வு நேரத்தில் சந்தித்து கதை பேசினார்களாம். ஆக்ஷன் மசாலாக்களுக்கு மக்கள் கொடுக்கிற மரியாதை ரொம்ப ஆபத்தாக இருப்பதை புரிந்து கொண்ட விஷால், வெங்கட்பிரபு மாதிரி நகைச்சுவை கலந்து கதை சொன்னால்தான் எடுபடும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இந்த சந்திப்பு, தித்திப்பு என்கிற அளவிலேயே நிறைவுற்றதாம்.

தீராத விளையாட்டு பிள்ளைக்கு பிறகு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்வான்சை வாங்கி ஒரு புது வீட்டையும் வாங்கி போட்டிருக்கும் வெங்கட், விஷால் கால்ஷீட்டை இந்த நிறுவனத்திற்கே பயன்படுத்துவார் போலவும் தெரிகிறது.

ஆனாலும் மதில் மேல் பூனையாக அஜீத்தின் அழைப்புக்காகவும் காத்திருக்கிறாராம் வெங்கட்.

No comments: