சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவனை எடுத்து முடித்த செல்வராகவன் சுமார் இரண்டு வருடங்களாக அந்தப் படத்தை தரதரவென்று இழு இழுவென்று இழுத்து முடித்தார். அடுத்து செல்வராகவன் குறி வைத்திருப்பது விக்ரமைத்தான். ஆனால் செல்வராகவனைப் பற்றித் தெரிந்தவர்கள் எல்லாம் ‘கந்தசாமியே பல மாதங்களுக்குப் பிறகுதான் ரிலீசாகி இருக்கிறது... இனிமேலும் செல்வராகவன் படம்னா... அதுக்கு ரெண்டு வருஷம் போயிடும்... இப்படியே நடிச்சிட்டிருந்தா ஆயுசு பூராவுக்கும் நாலு படம் தான் நடிக்க முடியும்’ என்றும்... இப்படியே போனா மக்கள் மறந்தே போயிடுவாங்கன்னும் காதில் போட்டிருக்கிறார்கள். இதனால் தீவிரமாக யோசித்து வருகிறார் விக்ரம்... செல்வராகவன் படத்தில் நடித்து ரிஷ்க் எடுக்கலாமா வேண்டாமான்னு...
Friday, September 18, 2009
ரிஷ்க் எடுப்பாரா விக்ரம்?
படங்களில் நடிப்பதற்கு உடம்பைக் கூட்ட குறைக்க, சண்டைக்காட்சிகளில் நடிக்க என பல ரிஸ்க்களை எடுக்கக் கூடியவர் விக்ரம்.
அதற்கு அவர் எப்போதுமே யோசித்ததில்லை. ஆனால் அவர் அடுத்து ரிஷ்க் எடுப்பாரா என்று கேள்விக்கணை எழுவது செல்வராகவன் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்பது பற்றிதான்.
No comments:
Post a Comment