புதுக்கோட்டையில் சரவணன்’ படத்தில் அறிமுகம் ஆன அபர்ணா அதைத் தொடர்ந்து ‘ஏபிசிடி’ படத்தில் நடித்தார். அதற்கு பின்பு எந்த வாய்ப்புகளுமே இல்லாததால் சும்மா வீட்டிலேயே இருந்தவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு ‘கண்ணுக்குள்ளே’ படத்தில் கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே குறும் படம் ஒன்றில் நடிக்கிறார் அபர்ணா. இந்தக் குறும்படத்தில் இவருக்கு இலங்கை அகதி வேடமாம். ‘ஈழக்கனவுகள்’ என்ற தலைப்பு கொண்ட இந்த குறும் படத்தை கலைவேந்தன் இயக்கி வருகிறார். இலங்கை அகதிப் பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் இந்த படத்தில் கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே அழுது விட்டாராம் அபர்ணா.
ரசிகர்களையும் அழ வைக்குமா...?
No comments:
Post a Comment