தியேட்டருக்கு வந்த வேகத்தில் திரும்புவதுதான் விஷால் படங்களின் வழக்கம். அதை முடியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஷால் இப்போது தீராத ‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப் படம் தான் என்கிற நம்பிக்கை அவருக்கு மட்டுமில்லை... இயக்குநர் எல்லோருக்கும்தான். இந்தப் படத்தின் போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் விஷால், நீது சந்திரா பங்கேற்றனர். புகழ்பெற்ற புகைப்படகலைஞர் வெங்கடராமன் ஸ்டில்களைச் க்ளிக்கிக் கொண்டிருந்தார். அப்போது போட்டோகிராபர் அசோசியேசன் உறுப்பினர்கள் நுழைந்து வெங்கடராமனுக்கு தடங்கல் ஏற்படுத்தினர். இதனால் போட்டோ ஷூட் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் வெங்கடராமன் போட்டோகிராபர் அசோசியேசனில் உறுப்பினராக இல்லாததுதானம்...
ம்... படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே தடங்கலா...? என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம் விஷால்.
No comments:
Post a Comment