கடந்த சில மாதங்களுக்கு முன் லண்டனில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டிருந்தார் யுவன் சங்கர் ராஜா. ஆனால், இலங்கையில் நடந்த பெரும் போரினாலும், அப்பாவி தமிழர்களின் அழிவினாலும், இந்த நிகழ்ச்சியைப்போய் இப்போது நடத்துவதா என்ற வருத்தத்தில் கேன்சல் செய்துவிட்டார்.
ஆறாத ரணம் மனசில் இருந்தாலும், ஆறுதலாக இருக்கட்டுமே என்று முடிவு செய்திருக்கிறாராம் இப்போது. கூடுதல் போனசாக இந்த நிகழ்ச்சியே இசைஞானி இளையராஜாவின் தலைமையில் நடைபெறுகிறதாம். நவம்பர் மாதம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இந்த விழா. இதில் தனது குழுவினரோடு கலந்து கொள்கிறார் இசைஞானி இளையராஜா.
முதன் முதலாக துபாயில்தான் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். அங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக சென்னையிலும் அதே போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பிறகு கலைநிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் காட்டாத இளையராஜா, இந்த முறை லண்டன் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டதே இலங்கை தமிழர்களின் மனசுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்றுதானாம். இதில் பாடுவதற்காக தனியாக ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறாராம். இது உலக தமிழர்களின் மனசை உருக்குவதாக அமையும் என்கிறார்கள் இப்போதே.
யுவன், கார்த்திக்ராஜா, சின்மயி, ஸ்ரேயா கோஷல் என்று ராஜாவின் ட்ருப்பில் நட்சத்திர விவிஐபிகளும் உண்டு!
No comments:
Post a Comment