Friday, September 18, 2009

ஒரே நேரத்தில் இரண்டு படம்

தமிழில் ஒரு படம் தயாரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிற நிலையில் தமிழில் இரண்டு படங்களை எடுத்து வருகிறார் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். இவர் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட, அதைத் தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் ஹிட்டானது. சமீபத்தில் வந்து அரைகுறையாக ஓடிய ‘மாசிலாமணி’யும் இவர் தயாரிப்பில் வெளிவந்த படம்தான். ‘தில்லாலங்கடி’, ‘கந்தக்கோட்டை’ ஆகியவை இப்போது இவரது தயாரிப்பில் இருக்கும் இரண்டு படங்கள். ‘தில்லாலங்கடி’யில் ஜெயம்ரவி நடிக்கிறார். இவருக்கு ஜோடி தமன்னா. ‘கந்தக்கோட்டை’யில் நகுல் நடிக்க அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இரண்டு படங்களுமே நிச்சயம் வெற்றிப் படங்களாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அகோரம்.

நம்பிக்கை நிஜமாகட்டும்.

No comments: