காவிரியே வா...ன்னு கரையோரமா நின்னு கூப்பாடு போட்டாலாவது புண்ணியம் கிடைக்கும். இலியானாவே வா...ன்னு ஒவ்வொரு படத்திற்கும் அழைப்பு விடுக்கிறாங்களே, அதைபோயி என்னன்னு சொல்றது? கோலிவுட் கோவிந்துவே புலம்புகிற அளவுக்கு இலியானாவை வா வா ங்குது கோடம்பாக்கம். அவரும் இதோ, அதோன்னு போக்கு காட்டிக்கிட்டே இருக்காரு.
இப்போ லேட்டஸ்ட்டா ரெண்டு ஹீரோக்கள் இலியானாவுக்காக போட்டி போடுறாங்களாம். ஒருவர் விக்ரம். மற்றவர் சிம்பு. வல்லவன் படத்திற்கு யாரை ஹீரோயினாக்குவது என்று கிளி ஜோசியம் பார்க்காத குறையாக மண்டையை பிய்ச்சுக்கிறார் சிம்பு. யார் யாரையோ யோசித்த சிம்பு, கடைசியாக லேண்ட் ஆனது இலியானாவின் இடுப்பில்தான். இந்த முறை விடுவதில்லை என்று இலியானாவுக்கே போன் போட்டு பேசினாராம். “கால்ஷீட் டைட்டா இருக்கு. மேனேஜரை கேட்டு சொல்றேன்”னு பதில் சொல்லியிருக்காராம் இலியானா.
இதற்கிடையில் விக்ரம், தான் நடிக்கப் போகும் 24 என்ற படத்திற்காக இலியானாவை ஒப்பந்தம் செய்யப் போறாராம். ஆச்சர்யம் என்னன்னா இவரோட அப்ரோச்சுக்கு சரின்னு சொல்லிருச்சாம் கிளி! விக்ரம் குமார் இயக்கப் போகும் இந்த படத்தின் மூலம் தமிழ் பேச வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகம் ஆகியிருந்தாலும், இந்த முறை பெரும் எதிர்பார்ப்போடு தமிழுக்கு வரப்போகிறார் இந்த ஆந்திரத்து பெசரட்டு!
இதனால நயன்தாரா, த்ரிஷாவுக்கு ஒன்றும் நட்டமில்லே. ஏன்னா அவங்க மேல இப்போதெல்லாம் தமிழனுக்கும் நாட்டமில்லே!
No comments:
Post a Comment