ஆடுகளம் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன் என்ற வெற்றிப் படத்தை தந்தவரல்லவா... அனைத்து மீடியாக்களின் கவனமும் இவர் மீதுதான். தனுஷ் ஆடுகளத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். இவர்களுக்கெல்லாம் குரு போன்ற கதாபாத்திரத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன் நடிக்கிறார். ஈழக் கவிஞரான இவர் நடிக்கும் முதல் படம் இது.
படத்தின் கதாநாயகி கதைப்படி ஆங்கிலோ இந்தியன். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் த்ரிஷா. அவர் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்ததால் படத்திலிருந்து அவர் விலக, வேறு கதாநாயகி தேடி வருகிறார்கள்.
“இப்போதைக்கு தனுஷ் நடிக்கும் ஆக்சன் காட்சிகளை எடுத்து வருகிறோம். கதைப்படி ஹீரோயின் ஆங்கிலோ இந்தியன். புதுமுகமாக தேடி வருகிறோம். புதுமுகம் என்றால் கால்ஷீட் பிரச்சனையும் இருக்காது” என்று பிராக்டிகலாக பேசுகிறார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் இந்த புதிய முடிவுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆடுகளம் படத்தை இயக்குவது என்று முடிவானதும் ஸ்ரோயாவிடம் கால்ஷீட் வாங்கினார்கள். படத்தின் ஒன் லைனை முடிவு செய்வதற்குள் ஸ்ரேயா தந்த கால்ஷீட் காலாவதியானது. அவரும் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து, படத்திலிருந்து விலகினார்.
இரண்டாவதாக த்ரிஷாவிடம் கால்ஷீட் வாங்கப்பட்டது. கதை விவாதம் முடிந்து ஆஃபிஸ் போடுவதற்குள் அவர் தந்த கால்ஷீட்டும் காலாவதியானது. மூன்றாவது ஒரு விஷப் பரீட்சை எதற்கு என்றுதான் புதுமுகத்தை தேடுகிறார் வெற்றிமாறன். புதுமுகம் என்றால் அக்ரிமெண்ட் என்று வருஷக் கணக்கில் கால்ஷீட் கறக்கலாம் அல்லவா?
எப்படியோ, படம் பார்க்கிற மாதிரி இருக்கும் என்பதுதான் ஒரே ஆறுதல்.
No comments:
Post a Comment