நெட்டையும் போல்டையும் நெருக்கமாக முடுக்கின மாதிரிதான் சினிமாவும் சென்ட்டிமென்ட்டும்! பூஜை போடுவதில் துவங்கி புரஜக்ஷன் வரைக்கும் சில இடங்களை தேர்வு செஞ்சு வைச்சிருப்பாங்க. மீறி வேறு சில இடங்களில் நடத்தினால் அவ்வளவுதான். கதை கந்தல் என்பது இவர்களது மாறாத பயம். இப்படி இவர்களை மிரட்டும் லிஸ்டில் சேர்ந்து விட்டது ஒரு முக்கியமான பில்டிங்.
சென்னையின் பிரதான இடமான ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில் இருக்கிறது அந்த இடம். அதில் பல வருடங்களாக பாதி முடிந்த நிலையிலேயே நிற்கும் பிரமாண்ட கட்டிடம்தான் அது. இங்கு ஷ§ட்டிங் எடுக்கப்படும் போது எவ்வளவு கவனமாக இருந்தாலும் விபத்துகள் ஏற்படுவதாக முன்பே கிசுகிசுத்து வந்தார்கள். அதற்கு உதாரணமாக சில சம்பவங்களை அடுக்கும் அவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் ஒன்றையும் உதாரணம் காட்டுகிறார்கள். லிப்டில் ஏறும் போது அறுந்து விழுந்து ஸ்பாட்டிலேயே இருவர் மரணம். இதற்கு பிறகு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடைபெறுவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் மிருகம் ஆதி நடித்து வரும் அய்யனார் படப்பிடிப்பு இங்கு நடந்தது. சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். பாயும்போது திடீரென்று டைமிங் மிஸ்சாகி கீழே விழுந்தார் ஆதி. இதில் காலில் பலத்த அடிபட்டது அவருக்கு. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
இந்த விபத்திற்கு பிறகு அந்த பில்டிங்கை பொம்மாயி ஏரியாவாகவே நினைத்து மிரள்கிறதாம் கோலிவுட்.
No comments:
Post a Comment