Friday, September 11, 2009

விக்ரம் கே.குமார் படத்தில் இலியானா

இறுதியாக தமிழில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார், இடையழகி இலியானா. அவரை மனமிறங்க செய்திருப்பவர் யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார். மோகன் நடராஜன் தயா‌ரிக்கும் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குகிறார். ஹீரோவாக நடிப்பவர் சீயான் விக்ரம். படத்துக்கு 24 என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

அமெ‌ரிக்காவில் பிரபலமான 24 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை விக்ரம் கே.குமார் எழுதியுள்ளார் என்கிறார்கள் சிலர்.

வேறு சிலரோ, யாவரும் நலம் படத்தில் தொலைக்காட்சி தொடர் முக்கிய இடம் பிடித்ததால், 24 என்ற பெயருக்கும் அமெ‌ரிக்க தொலைக்காட்சி தொடருக்கும் தேவையில்லாமல் முடிச்சுப் போடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

எது எப்படியோ, படத்தின் கதை விக்ரமுக்கு பிடித்திருக்கிறது. அதேபோல் இலியானாவுக்கும் கதை பிடித்திருக்கிறதாம். முக்கியமாக இலியானாவின் தந்தை படத்தின் கதையை கேட்டு சொக்கிப் போய்விட்டாராம்.

ர‌ஜினி படத்தில் நடிக்காமல் நழுவியவரை விக்ரம் கே.குமா‌ரின் கதை வீழ்த்தியிருக்கிறது என்றால், நிச்சயமாக அது சாதனைதான்.

No comments: