Friday, September 11, 2009

அப்பாவாக நடிக்கும் அரையடி நடிகர்

டிஷ்யூம் படத்தில் நடித்த அரையடி அஜயனை மறந்திருக்க மாட்டீர்கள். மலையாளத்தில் உண்ட பக்ரூ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார். உலக திரைப்பட வரலாற்றில் ஹீரோவாக நடித்த மிகக் குறைவான உயரம் கொண்ட நடிகர் இவர்தானாம்.

பக்ரூவின் புகழ் மகுடத்தில் மற்றொரு இறகும் இணையப் போகிறது. பிரபல ஹீரோ ஒருவருக்கு அப்பாவாக நடிக்கிறார் இவர்.

மலையாளத்தில் மை பிக் ஃபாதர் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு அப்பாவாக நடிப்பவர், நமது அஜயன். படத்தின் பெய‌ரில் வரும் பிக் ஃபாதர் இவர்தானாம்.

ஜெகதி ஸ்ரீகுமார், இன்னசென்ட் உள்ளிட்ட மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கனிகா.

தமிழுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அதிகமிருப்பதால், தமிழில் படம் டப் செய்யப்படும் சாத்தியம் அதிகமுள்ளது.

No comments: