skip to main |
skip to sidebar
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் போலோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
இந்தியா கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும்.
போட்டித் தொடக்க விழாவில் இசை ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.
No comments:
Post a Comment