இதற்கு நடுவில் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராய் வரும் கரோலினுக்கும், குட்டிக்கும் காதல். அந்த காதலுக்கு பின் ஒரு அருமையான காதலும் துரோகமும் சேர்ந்த கதை அமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர். ஆலமரத்தானுக்கு அல்லக்கை போல செயல் படும் கரோலின் அவரை என்கவுண்டர் செய்ய, ப்ரச்சனை இன்னும் உச்சத்துக்கு வர. க்ளைமாக்ஸ் வெடிக்கிறது.
மிக, மிக இயல்பான காட்சிகளுடன், பின்னால் மிசைல் துரத்தும் வேகத்தில், பரபரப்பான திரைக்கதையில் பறந்திருக்கிறார் இயக்குனர் யுரேகா. படம் முழுவதும், திருப்பங்களும், முடிச்சுகளுமாகவே போகிறது. கரோலினுக்கு பின் இருக்கும் ஒரு அண்டர்கரண்ட் விஷயம் படத்துக்கு மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும்.
தூத்துக்குடி கார்திகா ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு, ஆங்காங்கே தென்படுகிறார். இன்ஸ்பெக்டர் கரோலினாக வரும் அனயாவுக்கு அருமையான கேரக்டர். வழக்கமாய் சீரியஸாகவே இருக்கும் அந்த முகத்துக்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஆலமரத்தானாக ராதாரவி. மிகவும் பண்பட்ட நடிப்பு. என்ன இவர் எனன் தான் ரவுடியாக இருந்தாலும் நல்லவராய் காட்ட நாயகன் ரேஞ்சுக்குகான காட்சிகள் கொஞ்சம் ஓவர்.
ஒளிப்பதிவு ஓகே ரகம் ஆலமரத்தானின் மாப்பிள்ளையை துரத்தி கொல்லும் காட்சியில் ஒளிப்பதிவாளருடன், எடிட்டரும் கை கோர்த்து பின்னியிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான மசாலா தமிழ் சினிமாவுக்கு புதுசு.
மதுரை சம்பவம் என்கிற பெயருக்கு பதிலாய் எந்த ஊர் பற்றி காட்டியிருந்தாலும் இந்த கதைக்கு பொருந்தும். மதுரையை சுற்றி கதை இருந்தால் ஹிட் என்கிற செண்டிமெண்டோ..?
No comments:
Post a Comment