Friday, September 11, 2009

பழசிராஜாவுக்கு ஒரு இணையதளம்

சரத்குமாரும் மம்முட்டியும் இணைந்து ‘பழசிராஜா’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கி வருகிறார். முதல் இந்திய சுதந்திர போர் உருவான 1857 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கான இணையதளம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் மம்முட்டிம் சுப்ரிம் ஸ்டார் சரத்குமாரும் கலந்து கொண்டனர். மம்முட்டி பேசும் போது ‘தமிழ்ப் படத்தை மலையாளத்தில் ரீமேக் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே ரிலீஸ் செய்யலாம். தமிழ் படங்கள் அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன...’ என்று குறிப்பிட்டார்.

No comments: