2007ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'காஞ்சிவரம்' என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.'குலோபி டாக்கீஸ்' என்ற கன்னட படத்தில் நடித்தற்காக உமாஸ்ரீ, சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு படமாக ஷாருக்கானின் 'சக்தே இந்தியா' படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த குடும்ப படமாக அமீர்கானின் 'தாரே ஜமீன் பர்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனராக 4 பெண்களை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகராக சங்கர் மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment